பிரெஞ்சு அரசாங்கம் கூகுள் நிறுவனத்திற்கு 1.1 மில்லியன் யூரோ அபராதம் விதித்துள்ளது.
கூகுள் நிறுவனம் ஹோட்டல் தொழில் வலைதளங்களில் இருந்து தகவல்களை பயன்படுத்தி ஹோட்டல்களுக்கு ஒன்று முதல் ஐந்து நட்சத்திரங்கள் வரை வரிசையாக வழங்கியது. கூகுளில் தரவரிசை காண்பிக்கப்படுவது குறித்து ஹோட்டல் உரிமையாளர்கள் புகார் அளித்தனர். அதன்படி பிரெஞ்சு அரசாங்கம் இந்த விவகாரத்தை விசாரணை செய்து வந்தது.
மேலும் கூகுளில் ஹோட்டல் தரவரிசை நுகர்வோரை தவறாக வழி நடத்துவதும் விசாரணையில் தெரியவந்தது. ஆகையால் கூகுள் அயர்லாந்துமற்றும் கூகுள் பிரான்ஸ் ஆகிய இரண்டிற்கும் 1.1 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை வழங்குவதற்கு கூகுள் நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது என்று பிரான்சின் நிதி அமைச்சகம் மற்றும் மோசடி கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.