இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் வன்முறை வெடித்து 174 பேர் சம்பவத்தில் அந்த கால்பந்து நிறுவனத்திற்கு 13 லட்சம் அபராத விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்தோனேசிய நாட்டின் மலாங் பகுதியில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தில் கடந்த சனிக்கிழமை அன்று கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்த சமயத்தில், மிகப்பெரிய வன்முறை வெடித்தது. அதன் பிறகு மக்கள் அங்குமிங்கும் ஓடியதால் கூட்ட நெரிசலில் சிக்கி 174 நபர்கள் பரிதாபமாக பலியாகினர்.
மேலும் 180 க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், அந்த கால்பந்து நிறுவனத்தினுடைய இரண்டு அதிகாரிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்த கால்பந்து நிறுவனத்திற்கு 13 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.