Categories
உலக செய்திகள்

ஊரடங்கு விதி மீறல்… 16 கோடி ரூபாயை தாண்டிய அபராதம்… போலீசார் அதிரடி..!!

ஊரடங்கு உத்தரவை மீறியவர்களிடம் இதுவரை 16 கோடியே 19 லட்சத்து 27 ஆயிரத்து 450 ரூபாய் அபராதம் வசூலானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தேவையின்றி மக்கள் வெளியில் வருவதற்கு தமிழக அரசு தடை விதித்தது. தடையை மீறி வெளியில் சுற்றி திரிபவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தும் கைதுசெய்தும்  தண்டனை கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் 98 நாட்களை ஊரடங்கு கடந்த நிலையில் தடை உத்தரவை மீறியதாக 7 லட்சத்து 70 ஆயிரத்து 599 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தடையை மீறிய குற்றத்திற்காக அபராதமாக இதுவரை 16 கோடியே 19 லட்சத்து 27 ஆயிரத்து 405 ரூபாய் வசூலிக்கப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Categories

Tech |