Categories
சினிமா மாநில செய்திகள்

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடியுங்கள் – முதல்வர் வேண்டுகோள் …!!

கோரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடுங்கள் என்று தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீனாவில் கடந்த இரண்டு மாதங்களாக பரவு கொரோனா வைரஸ் அந்நாட்டையே சிதைத்துள்ளது.
சீனாவில் மட்டுமே கொரோனாவல் 2,912 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவை தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க உலக ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்க தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.சென்னை சுகாதாரத்துறை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக மருத்துவர்கள் , சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் தமிழக முதல்வர்  பேசினார். அப்போது அவர் கூறுகையில் , கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடித்து உலகளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |