Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘பைனலுக்கு போற நேரத்துல’ …. ‘இப்படி நடக்குறது கஷ்டமா இருக்கு’- ஈயான் மோர்கன் வருத்தம் ….!!!

அணி வீரர்களுக்கு  அடுத்தடுத்து காயம் ஏற்படுவது  எங்களுக்கு பெரும் வருத்தத்தை தருவதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஈயான் மோர்கன் கூறியுள்ளார் .

டி 20 உலக கோப்பை தொடரில் சூப்பர்12 சுற்று போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதில் குரூப் 1 பிரிவில்  இடம்பிடித்துள்ள இங்கிலாந்து ,ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளும் ,’குரூப் 2′ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் அணியும் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதனிடையே நேற்று நடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான களமிறங்கிய ஜேசன் ராய் காயம் காரணமாக பாதியிலேயே போட்டியில் இருந்து வெளியேறினார் அவரை பரிசோதித்த போது கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது .இதனால் அவர் அரையிறுதி சுற்றில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்தது.

இதனிடையே ஜேசன் ராயின் காயின் குறித்து அந்த அணியின் கேப்டன் இயான் மோர்கன் கூறும்போது,” ஜேசன் ராயின் காயம் எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் .ஆனால் அவர் குணமடைந்து விடுவார் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம். அதோடு இந்த சீசனில் இறுதியில் அணி வீரர்கள் அடுத்தடுத்து காயமடைவது எங்களுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் காயம் மற்றும் வேறு சில காரணங்களாலும் எங்கள் அணியில் இருந்த ஜோஃப்ரா ஆர்ச்சர், சாம் கரன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் வரிசையில் தற்போது டைமல் மில்ஸ்,ஜேசன் ராய் இணைந்திருப்பது எங்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது “இவ்வாறு அவர் கூறினார்.

Categories

Tech |