Categories
மாநில செய்திகள்

வரப்போகிறது… “இறுதி செமஸ்டர் அட்டவணை”… மாணவர்களே அலார்ட்…!!

இறுதி செமஸ்டர் தேர்வுகள் எப்பொழுது, எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா தொற்றால் பல்வேறு துறைகள் முடக்கப்பட்டு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இத்தகைய சூழலில் மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஆல் பாஸ் என்றும் சமீபத்தில் அரசு உத்தரவு தெரிவித்திருந்தது. ஆனால் இறுதிப பருவத்தில் படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு எந்த விலக்கும் கிடையாது என்றும் அவர்களுக்கு தேர்வு என்பது கட்டாயம் என அரசு தெரிவித்திருந்தது. அந்த வகையில் இறுதி செமஸ்டர் தேர்வுகளை  கட்டாயம் நடத்த  வேண்டும் என்ற  உச்ச நீதிமன்ற  தீர்ப்பின் அடிப்படையில், தேர்வுகளை விரைவில் நடத்த  முடிவு செய்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், எவ்வாறு தேர்வுகளை நடத்தலாம்? ஆன்லைனில் நடத்தலாமா? என்பது குறித்து உயர்கல்வித்துறை அதிகாரிகள், துணைவேந்தர்களின் கருத்துக்களை கேட்டு அறிந்த பின் இது குறித்த அறிவிப்பை அரசு வெளியிடும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக அரசுக்கு அறிக்கை தர, உயர்கல்வி செயலாளர் தலைமையில்  குழு அமைக்கப்பட இருப்பதாகவும் அன்பழகன்  தெரிவித்துள்ளார்.

Categories

Tech |