Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சண்டை வந்த இப்படியா பண்ணுவீங்க… போலீஸ் ஏட்டு செய்த காரியம்… கதறி அழும் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக போலீஸ் ஏட்டு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தை அடுத்துள்ள பெரிய கொல்லப்பட்டியில் கணேசன்(49) என்பவர் அவரது மனைவி சரண்யா(38), மகன் தனுஷ்(18), மகள் திவ்யதர்ஷினி(16) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணேசன் எலச்சிபாளையம் காவல்நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து கணவன் மனைவி இருவருக்கும் குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் மிகவும் மனமுடைந்த கணேசன் மது அருந்திவிட்டு விரக்தியில் விஷம் குடித்துள்ளார்.

இந்நிலையில் கணேசன் மயக்கமடைந்ததை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தது திருச்செங்கோடு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்ட குடும்பத்தினர் மருத்துவமனையிலேயே கதறி அழுதது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |