மெக்சிகோ நாட்டில் சிமெண்ட் தொழிற்சாலையின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு இரண்டு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
மெக்சிகோ நாட்டில் இருக்கும் துலா நகரத்தில் கிரஸ் அசூல் என்ற சிமெண்ட் தொழிற்சாலை அமைந்திருக்கிறது. இந்த தொழிற்சாலையின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு 2 தரப்பினருக்கு இடையில் நெடுங்காலமாக போட்டி ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் இரு தரப்பினருக்குமிடையே துப்பாக்கி சூடு மோதல் நடந்தது. இதில் 8 பேர் கொல்லப்பட்டதாகவும் 11 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இச்சம்பவம் தொடர்பில் 9 நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.