வீடுகட்டும் தகராறில் அண்ணனை கொலை செய்த தம்பிக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள கண்டீஸ்வரம் பகுதியை சார்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவருடைய தம்பி காமராஜ். இருவரும் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் சொந்தமான பூர்வீக இடத்தில் வீடு கட்டுவதில் அண்ணன் தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காமராஜ் தனது அண்ணனான கிருஷ்ணமூர்த்தியை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளார். அதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணமூர்த்தியை குடும்பத்தினர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அண்ணனை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும் ரூபாய் 5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று முன்தினம் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்