வருகின்ற நவம்பர் 21 ஆம் தேதி முதல் டிசம்பர் 18ஆம் தேதி வரை FIFAகால்பந்து உலகக் கோப்பை கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. இதனிடையே இந்த தொடருக்கான சின்னம் வெளியிடப்பட்டுள்ளது.ஐந்து அல்லது ஆறு கால்பந்து கூட்டமைப்புகளை சேர்ந்த 32 நாடுகள் இந்த கால் வந்து உலகக்கோப்பை தொடரில் விளையாட உள்ளன. இந்த போட்டி மொத்தம் 8 மைதானங்களில் நடைபெறுகிறது. இதுவரை மொத்தம் 29 அணிகள் இந்த தொடரில் விளையாட தகுதி பெற்ற நிலையில் இத்தாலி இந்த தொடரில் விளையாட தகுதி பெறவில்லை.
இந்நிலையில் இந்த தொடருக்கான சின்னம் வெளியிடப்பட்டுள்ளது. “La ‘eeb”என்ற பெயரில் இந்த சின்னம் வெளியிடப்பட்டுள்ளது. அரபி மொழிகளில் இதற்கு அபாரணத்திறன் படைத்த வீரர் என்று பொருளாகும். இந்தச் சின்னம் அறிமுகமான அடுத்த நொடி முதல் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் மீம்ஸ் போட்டு நேர்மறை விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.