Categories
உலக செய்திகள்

ஈராக்கில் மூக்கில் ரத்தம் வடியச்செய்யும்…. புதிய வகை காய்ச்சல்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

ஈராக் நாட்டில் மூக்கு வழியே இரத்தம் வடியக்கூடிய வித்தியாசமான காய்ச்சல் அதிகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக் நாட்டில் புதிய காய்ச்சல் ஏற்பட்டு பல பேர் உயிரிழந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காய்ச்சல் இந்தியாவிலும் பரவக்கூடிய அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வைரஸ் ஆப்பிரிக்க நாட்டில் தான் தோன்றியிருக்கிறது. இந்த வைரஸ் சுமார் நாற்பத்தி மூன்று வருடங்களுக்கு முன்பே இரவு நாட்டிற்குள் பரவியிருக்கிறது.

ஆனால் தற்போது இந்த நோய் ஏற்படும் நபர்களில் ஐந்தில் இரண்டு பேர் பலியாவது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு வித உண்ணி தாக்குதலுக்குள்ளான ஆடு, மாடு போன்ற விலங்குகளோடு அதிகமாக தொடர்பு கொண்டவர்களுக்கு இந்த காய்ச்சல் எளிதில் ஏற்படுகிறது என்று கூறப்பட்டிருக்கிறது.

மேலும், உடலில் ரத்தகசிவு, மூக்கிலிருந்து ரத்தம் வடிவது போன்றவை இந்த காய்ச்சலின் அறிகுறிகளாக இருக்கிறது. தற்போது 33 வயதிற்கு குறைவானவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த காய்ச்சலுக்கு தற்போது வரை தடுப்பூசி கண்டுபிடிக்க முடியவில்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இந்திய நாட்டில் ராஜஸ்தான், உத்திர பிரதேசம் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் இதற்கு முன்பு இந்த காய்ச்சல் பரவியது. ஆனால் சமீப வருடங்களாக இந்தியாவில் இந்த காய்ச்சல் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |