Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தானில் பரவும் மர்மக்காய்ச்சல்!”.. டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளால் மக்கள் பீதி..!!

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரத்தில் டெங்கு அறிகுறிகளோடு மர்ம காய்ச்சல் பரவி வருவதால் மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள கராச்சி என்னும் நகரத்தில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டவர்கள் போன்று இரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் இரத்த தட்டுகள் குறைகிறது. மேலும், டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தான் ஏற்படுகிறது.

ஆனால் பரிசோதித்துப் பார்க்கும் போது டெங்கு காய்ச்சல் இல்லை என்று தெரியவந்திருக்கிறது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களை உண்டாக்கும் வைரஸின் குடும்பமான ஆர்போவைரசஸ் வகையை சேர்ந்த வேறு வைரஸாக இருக்கக்கூடும் என்று கூறுகிறார்கள்.

எனினும், இந்த காய்ச்சலால் தற்போதுவரை உயிரிழப்புகள் ஏற்படவில்லை. மருத்துவர்கள், டெங்கு காய்ச்சலுக்கு மேற்கொள்ளும் சிகிச்சையைத்தான் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மேற்கொண்டு வருகிறார்கள்.

Categories

Tech |