Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ரத்த அழுத்தம் கட்டுப்படுத்த… இதை அதிகம் சாப்பிடுங்க…!!

சமையலில் பயன்படுத்தும் வெந்தயத்தை எவ்வாறு மருத்துவத்திற்குப் பயன்படுத்த முடியும் என்பது பற்றிய தொகுப்பு

  • வெந்தயத்தை நன்றாக அரைத்து தீ காயத்திற்கு மருந்தாக போட்டால் காயம் விரைவில் ஆறும்..
  • வெந்தயத்துடன் அவுரி இலையையும் சேர்த்து மிளகு சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் பூரான் கடி விஷம் அகலும்..
  • தினமும் வெந்தயத்தை 15 கிராம் அளவு உண்டு வருவதனால் ரத்த அழுத்தம் சீராகி ரத்தத்தில் உள்ள கொழுப்புகள் குறைந்து ரத்தம் சுத்தமாகும்.
  • வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் ஜீரண சக்தி அதிகரிக்கும். உடல் எடை குறைந்துவிடும்.
  • வெந்தயத்தை நன்றாக அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வருவதனால் தலைமுடி மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறும்.
  • வாய்வு தொல்லையால் அவதிப்படுபவர்கள் காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை வறுத்து பொடி செய்து சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும்.
  • இரவில் வெந்தயத்தையும் நெல்லி இலையையும் ஒன்றாக ஊற வைத்து அந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சீதபேதி குணமடையும்.
  • சிறிய துண்டு இஞ்சியுடன் வெந்தயத்தை அரைத்து சாப்பிட்டால் பித்தம் சரியாகும்.

Categories

Tech |