Categories
உலக செய்திகள்

OMG : கொரோனாவிடம் ஆட்டம் காட்டிய பாடகி…. பின் நேர்ந்த சோகம்…. பிரபல நாட்டில் அதிர்ச்சி….!!!!

செக் குடியரசு நாட்டில் தடுப்பூசியை எதிர்க்கும் பாடகி ஒருவர் கொரோனா தொற்றை வேண்டுமென்றே தனக்கு வர வைத்த நிலையில் அவர் மரணமடைந்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

செக் குடியரசு நாட்டில் வசிக்கும் ஹனா ஹொர்கா என்ற கிராமிய பாடகி கொரோனா தடுப்பூசியை எதிர்பவர். எனவே, இவர் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை. எனினும் இவரின் கணவர் மற்றும் மகன் இருவரும் தடுப்பூசி எடுத்துக் கொண்டனர். இவரின் மகன், தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறு தாயை தொடர்ந்து வற்புறுத்தி வந்திருக்கிறார்.

ஆனால், தடுப்பூசி எடுத்துக் கொள்வதைக் காட்டிலும் கொரோனாவால் பாதிக்கப்படுவதே மேல் என்று ஹனா கூறியிருக்கிறார். இதனிடையே, ஹனாவின் கணவர் மற்றும் மகன் இருவருக்கும் சில நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே, இருவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டார்கள்.

எனினும், ஹனா, கணவர் மற்றும் மகன் இருவருடனுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் தொடர்பிலிருந்து வந்திருக்கிறார். மேலும், முகக்கவசம் அணிந்து கொள்ளாமல் அவர்களுடன் இருந்திருக்கிறார். அதாவது, ஹனா தனக்கு கொரோனா பாதிப்பை வரவைத்து அதிலிருந்து குணமடைந்து விட்டு, அந்த சான்றிதழை காண்பித்து திரையரங்கு போன்ற பொது இடங்களுக்கு செல்லலாம் என்று நினைத்திருக்கிறார்.

கணவர் மற்றும் மகன் இருவரும் தொடர்ந்து எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே, வீட்டில் தனிமையில் இருந்தார். ஆனால் உடல்நிலை  மோசமடைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று உயிரிழந்தார். இது பற்றி அவரின் மகன் கூறுகையில், தன் தாய் கொரோனா தடுப்பூசியை செலுத்தாமல் இருந்தது தான் அவர் உயிரிழக்க காரணம் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |