பிரிட்டனில், பெண் சிறை காவல் அதிகாரி ஒருவர் சிறையில் இருந்த கைதியை முத்தமிட்ட ரகசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்காட்லாந்தில் இருக்கும் West Lothian-ன் HMP Addiewell சிறையில் கெவின் ஹாக் என்ற கைதி போக்குவரத்து விதிமுறையை மீறியதால் 3 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், கெவின் ஹாக், பெண் சிறை காவலரை, முத்தமிடுகிறார். இதனை கெவின் சிறையில் தடை செய்யப்பட்டிருக்கும் மொபைலை பயன்படுத்தி ரகசியமாக வீடியோ எடுத்திருக்கிறார்.
அந்த வீடியோ வெளிவந்த பின்பு, கடந்த வாரம் அந்த பெண் காவலர் அழுத்தத்தினால் பணியை விட்டு விலகியதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வீடியோ தொடர்பில் விசாரணை நடத்த சிறை தலைவர்கள், காவல்துறையினரை அணுகியுள்ளனர். அதாவது, அந்த வீடியோ சில வாரங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டிருக்கிறது.
அந்த வீடியோவில் இருக்கும் குற்றவாளி கெவின், கடந்த மாதம் சிறையிலிருந்து விடுதலையானது தெரியவந்துள்ளது. முதலில் அந்த பெண் காவலரை பழிவாங்க அந்த வீடியோவை அவர் வெளியிட்டதாக கருதப்பட்டது. தற்போது அந்த நபர் பெருமைக்காக வீடியோவை வெளியிட்டுள்ளார் என்று விசாரணையில் தெரியவந்திருக்கிறது.