காவல் நிலையத்தில் பெண் காவலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் காவல் நிலையத்தின் முன்பு பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக நின்றுள்ளனர். இதனை பார்த்த உயரதிகாரிகள் பணியில் இருந்த பெண் காவலரை அழைத்து கடுமையாக திட்டியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் காவலர் தண்ணீரில் பூச்சிமருந்து கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை பார்த்த சக அதிகாரிகள் அந்த தண்ணீரை தட்டிவிட்டு பெண் காவலரை காப்பாற்றியுள்ளனர். அதன்பிறகு அதிகாரிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான சிபிசக்கரவர்த்தி காவல் நிலையத்தில் பணியாற்றும் 3 பெண் காவலர்களை அழைத்து பேசியுள்ளார். அதன்பிறகு தற்கொலை முயற்சி செய்த பெண் காவலரை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு இடமாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.