பழங்களை அதிக அளவில் உண்ணும்போது முகங்கள் எப்போதுமே இளமையாக இருக்கும். அதில் டிராகன் பழம் சருமத்திற்கு மிகவும் நன்மையானது.
டிராகன் பழங்கள் உடல் ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் நன்மை செய்யக் கூடிய பழம். நம்மை வயதாகி காட்டுவதே நமது முகம் தான். இந்தப் பழத்தை அதிக அளவில் நாம் எடுத்துக்கொள்ளும் பொழுது இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றி நமது சருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது.
சருமத்தில் சுருக்கங்கள் வராமல் இருந்தாலே சரும பிரச்சனையை தவிர்க்க முடியும். இந்த டிராகன் பழத்தில் விட்டமின் பி, வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளது. இவை சருமத்திற்கு நன்மை செய்யக்கூடியது. இதைக்கொண்டு எப்படி சரும கோளாறுகளை நீக்குவது என்பதைப் பார்க்கலாம்.
முகப்பருக்களுக்கு மருந்து
முகப் பருக்களுக்கு டிராகன் பழம் ஒரு சிறந்த மருந்தாகும். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றம் சருமத்துளைகளை பாதுகாக்கின்றது. மேலும் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைக்கிறது. டிராகன் பழத்தில் உள்ள கூளை எடுத்து நன்றாக பிசைந்து கொண்டு ஒரு காட்டன் துணியை எடுத்து அதனை தொட்டு முகத்தில் தடவவேண்டும். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் முகப்பரு மறைந்துவிடும்.
வெயிலால் சரும பாதிப்பு
வெயில் நமது உடலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் மிகவும் முக்கியமாக பாதிக்கப்படுவது முகம். வெயிலில் புற ஊதா கதிர்கள் காரணமாக முகத்தில் அரிப்பு, வீக்கம், சிவத்தல் போன்றவை உண்டாகும். இதைப்போக்க பேசியல் செய்து கொள்வார்கள். இந்த பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என்றால் டிராகன் பழத்தை உண்ண வேண்டும். டிராகன் பழத்தில் உள்ள வைட்டமின் சி வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாத்து, முகத்திற்கு கூடுதல் அழகைத் தருகிறது.
வயதான தோற்றத்தை தடுக்கின்றது
உடலில் ஃப்ரீ ரேடிக்கல் காரணமாக செல்கள் சேதமாகி வயதான தோற்றம் உண்டாகின்றது. இது வயது முதிர்ந்த பின் வர வேண்டும். ஆனால் இயற்கையாக இளம் வயதிலேயே வருவதால் அதனை தடுக்க இந்த டிராகன் பழத்தை உண்ண வேண்டும். ஃப்ரீ ரேடிக்கல் செல்களுடன் எதிர்த்துப் போராடி முகத்தில் சுருக்கங்கள் நேர்த்தியான கோடுகளை மறைகின்றது. பழக்கூழுடன் தயிர் கலந்து ஃபேஸ் பேக் போடலாம். ஒரு வாரம் இவ்வாறு செய்தால் முகத்தில் சுருக்கங்கள் வராது.
வறட்சியை தடுக்கின்றது
நமது உடலில் சரியான நீரோட்டம் இல்லை என்றால் சரும வறட்சியை சந்திக்கும். அதனை போக்க வேண்டுமென்றால் நீங்கள் டிராகன் பழத்தை பயன்படுத்தலாம். குளிர் காலத்தில் கடுமையான வறண்ட சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுவது இந்த பழம். டிராகன் பழம் கூழுடன் தேன் கலந்து அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவினால் வறட்சியை தடுக்கலாம்.
முகம் பிரகாசமாக இருக்க
டிராகன் பழம் வைட்டமின் சி சத்துக்களை கொண்டிருப்பதால் இது முகத்தை சோர்விலிருந்து, மந்தமான தோற்றத்தில் இருந்து விடுபட வைக்கின்றது. இதனால் சருமம் புத்துணர்ச்சியாகவும், பிரகாசமாகவும் இருக்கின்றது. எப்போதெல்லாம் ஓய்வாக இருக்கிறார்களோ, அப்போதெல்லாம் டிராகன் பழத்தை மசித்து முகத்திற்கு பயன்படுத்துங்கள். இது இயற்கையான மருந்தாக, சருமத்திற்கு அதிக நன்மையைத் தருகின்றது.