மார்ச் 24ஆம் தேதி நாட்டு மக்களிடம் பேசிய போது 21நாள் ஊரடங்கு அறிவித்த பிரதமர் மோடி தற்போது மீண்டும் மக்களிடம் கொரோனா குறித்து டிவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டார். பிரதமர் நரேந்திர மோடிஅதில் மக்கள் அனைவரும் இணைந்து கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள். இந்தியாவில் மக்கள் ஊரடங்கு உலக அளவில் முன்னுதாரணமாய் இருக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிரான யுத்தம் நடத்தியதற்கு நன்றி . ஏப்ரல் 5-ல் இரவு 9 மணிக்கு மின்சார விளக்குகளை அணையுங்கள், பல்ப்பை அணையுங்கள். 9 நிமிடம் வீட்டில் அகல்விளக்கு ஏற்றுங்கள், டார்ச் லைட் அடியுங்கள், அகல்விளக்கை ஏற்றுங்கள் என்று மோடி தெரிவித்தார்.