Categories
மாநில செய்திகள்

கட்டணம் நிர்ணயம்… தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு…!!!

தனியார் ஆம்புலன்ஸ் சேவைக்கு கட்டணம் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பிறகு பல மாவட்டங்களில் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. இருப்பினும் சில மாவட்டங்களில் தொற்று அதிகமாக உள்ள காரணத்தினால் மக்கள் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகின்றது என்ற புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளது.

இதனால் தனியார் ஆம்புலன்ஸ் சேவைக்கு தமிழக அரசு கட்டணம் நிர்ணயம் செய்து அரசாணையை வழங்கியுள்ளது. நோயாளிகளை அழைத்துச் செல்லும் சாதாரண ஆம்புலன்ஸ்கள் முதல் 10 கிலோ மீட்டருக்கு 1500 ரூபாயும், உயிர் காக்கும் கருவி, ஆக்சிஜன் வசதியுள்ள ஆம்புலன்ஸ்கள் முதல் 10 கிலோ மீட்டருக்கு 2 ஆயிரம் ரூபாயும், வெண்டிலேட்டர் உள்ளிட்ட அதிநவீன கருவிகள் கொண்ட ஆம்புலன்ஸ்கள் முதல் 10 கிலோ மீட்டருக்கு ரூபாய் 4 ஆயிரமும் வசூலிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |