பிப்ரவரி மாதத்திலும் தமிழ்நாட்டில் மழை பெய்வது மிக மிக அரிய நிகழ்வு என்று வெதர்மேன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் முடிவடையும் என்று கூறப்பட்டது. அதற்கு பிறகு மழை பெய்து வந்தது. குறிப்பாக ஜனவரியில் தொடங்கி மீண்டும் பரவலாகப் மழை பெய்தது. குறிப்பாக ஜனவரி தொடங்கியதிலிருந்து கடந்த 5ஆம் தேதி இரவு முதல் 14 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. சென்னையில் மழை குறைந்த நிலையிலும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் கனமழை பெய்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விலகியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வறண்ட வானிலை நிலவும், கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பிப்ரவரி மாதம் இறுதிவரை மழை தொடரும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒருபோதும் முடிவடையாத பருவமழை அல்லது தமிழ்நாட்டின் குளிர்காலம் இல்லை என்று அவர் பதிவிட்டுள்ளார். பிப்ரவரி மாதத்தில் மழை பெய்வது தமிழ்நாட்டில் மிக மிக அரிய நிகழ்வு என்று அவர் தெரிவித்துள்ளார்.