Categories
தேசிய செய்திகள்

“நீட் தேர்வு அச்சம்”… மீண்டும் ஒரு மாணவி தற்கொலை… அச்சத்தில் பெற்றோர்கள்…!!

நீட் தேர்வு அச்சம் காரணமாக ஒடிசாவிலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு பற்றிய பயமே மாணவ, மாணவிகளை தற்கொலைக்கு தூண்டிவிடுவதாக உள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவ மாணவிகள் நீட் தேர்வுக்கு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஒடிஸாவிலும் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாது என்ற பயம் காரணமாக மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மயூர்பஞ்ச் மாவட்டத்திலுள்ள பரிபடா நகரத்தை சேர்ந்த மாணவி 19 வயதான உபாஷனா சாகு. இந்த மாணவி, நீட் தேர்வுக்காக ராஜஸ்தானில் உள்ள கோட்டா நகரில் தங்கி பயிற்சி எடுத்து வந்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மே மாதத்தில் வீடு திரும்பிய இவர் ஆன்லைனில் பயிற்சி எடுத்து வந்துள்ளார். ஆனால் தேர்வில் பாஸ் ஆகி விடுவோமா என்ற பயத்திலேயே மாணவி இருந்தாக கூறப்படுகிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு நடைபெற இருந்த நிலையில் சனிக்கிழமை அன்று இரவு தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் பதறியபடி மாணவியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், முன்னதாகவே உபாஷனா இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.இது குறித்து பரிபடா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |