Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கொரோனா அச்சம்…. பிரபல நடிகர் படப்பிடிப்புக்கு வர மறுப்பு…. தயாரிப்பாளர் அதிர்ச்சி…!!!

கொரோனாவின் அச்சத்தால் பிரபல நடிகர் படப்பிடிப்புக்கு வர மறுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வெளியான தாண்டவம், லிங்கா, பைரவா, விஸ்வாசம் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர் தான் பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு.இவர் தற்போது அண்ணாத்த மற்றும் மகா சமுத்திரம் ஆகிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ்,தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் மகா சமுத்திரம் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

ஆகையால் படக்குழுவினர் விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அங்கு ஜெகபதிபாபு நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதால் அவரை படப்பிடிப்புக்கு அழைத்துள்ளனர். ஆனால் ஜெகபதிபாபு படப்பிடிப்புக்கு செல்ல மறுத்துள்ளார்.

மேலும் கொரோனாவின் இரண்டாம் அலை தற்போது வேகமாக வீசி வருவதால் நெடுந்தொலைவு பயணம் செய்து என்னால் வர முடியாது என்று கூறி அவர் மறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இப்படத்தின் தயாரிப்பாளர் ஜெகபதிபாபு வசிக்கும் இடத்திலேயே இப்படத்திற்கான அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தலாமா என்று ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |