Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தொடர்கதையாகும் கரடி நடமாட்டம்: பயத்தில் பொதுமக்கள்

கடையத்தில் விவசாய நிலங்களை கரடிகள் சேதப்படுத்துவதால் மக்கள் பயத்தில் ஆழ்ந்துள்ளனர்

கடையம் வனச்சரக பகுதி, அம்பாசமுத்திரம் கோட்டம் மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் ஆகிய இடங்களில் இருந்து வன விலங்குகள் வெளியேறி வீட்டு விலங்குகளை தாக்கியும் விளைநிலங்களை சேதப்படுத்துவதும் தொடர்ந்து வருகின்றது. அதேநேரம் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கரடிகள் தோட்டங்களில் இருக்கும் தென்னை, மா, பலா உள்ளிட்டவைகளை அதிகம் சேதப்படுத்துகின்றன. இதுகுறித்து வனத்துறையினருக்கு புகார் கொடுக்கப்பட்டதும் பல இடங்களில் கண்காணித்து கரடி பிடிப்பதற்கு கூண்டுகளை வனத்துறையினர் வைத்தனர்.

ஏப்ரல் 29ஆம் தேதியிலிருந்து ஜூன் 16-ஆம் தேதிக்குள் ஐந்து கரடிகள் வைக்கப்பட்ட கூண்டுகளில் சிக்கியுள்ளன. தற்போது கடையம் வனச்சரக அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் கரடி ஒன்று சிக்கியுள்ளது. இந்நிலையில் பிடிபட்ட கரடியை முண்டந்துறை வனப்பகுதியில் விடுவதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்த 50 நாட்களில் கடையம் பகுதியில் ஆறு கரடிகள் பிடிபட்டது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |