சாத்தான்குளத்தில் சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவதிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா துறையினர் மற்றும் பொதுமக்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக வடசேரி காவல் நிலையத்தில் பணியாற்றும் சேவியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வியாபாரிகள் இருவர் உயிரிழந்த சம்பவம் நடந்த நிலையில் நடவடிக்கை எடுத்த அரசு ஆய்வாளர் ஸ்ரீதருக்கு பதிலாக சேவியர் நியமனம் செய்துள்ளது.
இந்த நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மாவட்ட நீதிபதி பாரதிதாசன் விசாரணையை தொடங்கியுள்ளார். விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழப்புக்கு போலீஸ் காரணம் என குற்றச்சாட்டு உள்ள நிலையில் காவல் நிலையத்தில் நடந்தது என்ன என்பது குறித்து மாவட்ட நீதிபதி பாரதிதாசன் போலீசாரிடம் விசாரணை நடத்தி வருகிறார். நேற்று கோவில்பட்டி கிளைச்சிறையில் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.