அப்பா இந்த வார்த்தைகள் கட்டுப்படாதவர்கள் மிகக் குறைவு. பெரும்பாலும் கண்டிப்பா அப்பாக்களின் பிம்பமாக இருக்கும். பொதுவாக தந்தை பாசம் என்பது அன்பை உள் ஒளித்து வைத்து கண்டிப்பை வெளியில் காண்பிக்கும் பலாப்பழத்திற்கு ஈடான உறவு என்பார்கள். இப்படி அன்பை தனக்குள் புதைத்து வாழும் தந்தையருக்கு மரியாதையும் நன்றியும் செலுத்தும் விதமாக தான் தந்தையர் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.
தன் பிள்ளையின் அழுகை, சிரிப்பு, கண்ணில் சந்தோசம் என அனைத்து தருணங்களிலும் பங்கெடுத்துக் கொள்பவர் தந்தை. சில தந்தைகள் தன் குழந்தைகளுக்கு நண்பர்கள் போன்று இருப்பார்கள். சிலர் குழந்தைகளிடம் அன்பை வெளிக்காட்டிக்கொள்ளாமல் கல்லுக்குள் ஈரம் என்பதைப் போல மறைந்து நின்று அன்பை செலுத்துவர். அன்னையிடம் அன்பை வாங்கலாம், தந்தையிடம் அறிவை வாங்கலாம் என்ற பாடல் வரிகள் தாயுடன் சேர்த்து உன் தந்தையின் முக்கியத்துவத்தையும் பறைசாற்றுகிறது. சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இந்த தந்தையர் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம்.
ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ஹீரோ காந்திதான் அவரை ரோல்மாடலாக வைத்துக்கொண்டுதான் ஒவ்வொரு செயலையும் செய்வார்கள். ஆகவே தந்தையும் குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்கி, அவர்களுக்கு நல்லொழுக்கங்களை கற்றுத் தர வேண்டும். அன்னையை தெய்வமாக போற்றும் நாம் இன்று அந்த அன்னையுடன் சேர்த்து தனது கஷ்டங்களை எல்லாம் தன்னுள்ளே புதைத்து கொண்டு தன் மகன் முன்பாகவும் மகள் முன்பாகவும் அன்பை மட்டுமே வெளிக்காட்டும் நமது வாழும் தெய்வமான நம் தந்தையருக்கு முகமலர்ச்சியோடு சொல்வோம் “இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் அப்பா”.