Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…. இனி குறைவான விலையில் தரமான உரம் கிடைப்பது உறுதி….. பிரதமர் மோடி அதிரடி….!!!!

டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் விவசாயி கௌரவ மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் 600 பிரதமரின் வேளாண்வள மையங்களையும் பிரதமரின் ஒரே நாடு ஒரே உரம் எனப்படும் தேசிய மக்கள் உரத்திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். அதேசமயம் தேசிய யூரியா பைகள் விற்பனையும் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு பி எம் கிஷான் திட்டத்தின் பனிரெண்டாவது தவணை பணமும் விடுவிக்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி,தேசிய மக்கள் உரத்திட்ட மூலமாக விவசாயிகளுக்கு குறைவான விலையில் தரமான உரம் கிடைப்பது இனி உறுதி செய்யப்படும். 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு விவசாயிகள் சிரமத்தை எதிர்கொண்டனர். கள்ளச் சந்தை மூலமாக யூரியா விற்பனை செய்யப்பட்டது.பல வருடங்களாக மூடப்பட்டிருந்த நாட்டின் ஆறு பெரிய யூரியா தொழிற்சாலைகள் மீண்டும் தொடங்க நாங்கள் கடுமையாக உழைத்தோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |