அணை கட்டினால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கபடுவதால் அதை கட்டக்கூடாது என விவசாயிகள் கோஷம் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகள் சங்கம் சார்பாக பொன்னகரம் பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க பகுதி குழு தலைவர் முருகேசன் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் பல கட்சி சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் குறுக்கில் இருக்கும் மார்க்கண்டேய என்ற இடத்தில் கர்நாடகா மாநிலத்தின் அரசு அணை அமைந்திருக்கிறது.
இதனால் மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் கடுமையான முறையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இத்திட்டத்தை கர்நாடக அரசு உடனடியாக கைவிட வேண்டும் எனவும், இதுபற்றி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காவிரி ஆற்றில் குறுக்கில் மேகதாது அணை கட்டக்கூடாது என கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷம் எழுப்பியுள்ளனர்.