நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாய் வழங்க வலியுறுத்தி தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயற்சி செய்த விவசாயிகள் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சேப்பாக்கத்தில் நெல்லுக்கு குவிண்டால் 2500 ரூபாய் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது,செய்தியாளர்களை சந்தித்த, பி.ஆர்.பாண்டியன் நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாய் வழங்க வலியுறுத்தி கடந்த 5 ஆண்டுகளாக போராடி வருவதாக தெரிவித்தார்.
மேலும், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநில அரசுகள் 2 ஆண்டு காலமாக 2500 ரூபாய் மானியம் கொடுத்து வருவதாகவும், இங்கு மானியம் தராவிட்டால் நெல்லுக்கான விலையை உயர்த்தித் தருமாறு கோரிக்கை வைத்தார்.மேலும்,தமிழக அரசால் கொடுக்கப்படும் மானியங்கள் விவசாயிகளுக்கு சென்றடைய வில்லை எனவும், அதில் பல முறைகேடுகள் நடப்பதாகவும், பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டினார்.