Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஒரே பிரச்சனையா இருக்கு..! விவசாயி எடுத்த விபரீத முடிவு… பெரம்பலூரில் சோக சம்பவம்..!!

பெரம்பலூரில் குடும்ப பிரச்சனை காரணமாக விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொளக்காநத்தம் கிராமத்தில் விவசாயியான ராமலிங்கம் ( 48 ) வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று ராமலிங்கம் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த மருவத்தூர் காவல்துறையினர் ராமலிங்கத்தின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |