புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலை பார்க்கும் போது கிணற்றில் தவறி விழுந்த விவசாயியை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மட்டங்கால் கிராமத்தில் சவுந்தரராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் விவசாயப் பணியை செய்து வரும் நிலையில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கயிற்றை கட்டி கிணற்றில் இறங்கி விவசாயி சவுந்தரராஜனை உயிருடன் மீட்டுள்ளனர். இதனையடுத்து அவர் அப்பகுதியிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் தீயணைப்பு படையினருக்கு நன்றி கலந்த பாராட்டு தெரிவித்துள்ளனர்.