மின்தடை ஏற்பட்டதினால் அதை சரி செய்ய முயற்சியும் போது விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அவிரியூர் கிராமத்தில் அருள்ஜோதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாய தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தனது உறவினர் வீட்டில் திடீரென மின்தடை ஏற்பட்டதால் அதில் பழுது ஏதேனும் இருக்கிறதா என பார்ப்பதற்காக மின்கம்பத்தில் ஏறி சரிசெய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராவிதமாக மின்சாரம் தாக்கி அருள்ஜோதி தூக்கி வீசப்பட்டுள்ளார்.
இதனைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் அருள்ஜோதியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அருள்ஜோதி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து அருள்ஜோதி மனைவி நித்யா அளித்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.