டிராக்டர் சக்கரத்தில் சிக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கண்ணம்பாக்கம் கிராமத்தில் விவசாயியான முரளி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரமீளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர் டிராக்டரை இயக்க முயற்சி செய்த போது கீழே விழுந்திருந்த ஸ்க்ரூட்ரைவரை எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது ட்ராக்டர் இயங்கயதால் முரளி எதிர்பாராதவிதமாக டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார்.
இதனை பார்த்த அருகில் உள்ளவர்கள் முரளியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு முரளியை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் முரளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.