சாய்பல்லவி எடுத்த திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனையடுத்து மலையாளத்தில் களி படத்தில் துல்கர் சல்மான்கானுடன் நடித்து பிரபல நடிகைகளில் ஒருவரானார்.
இவர் தமிழ் திரையுலகில் தியா படத்தின் மூலம் அறிமுகமானார். இந்நிலையில், சாய்பல்லவி எடுத்த முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். அதன்படி, தற்போது இவர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்த போதிலும் தற்போது இவர் எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை. இதனால் இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறதா என ரசிகர்கள் சமூக வளைதளத்தில் அதிகம் பதிவிட்டு வருகின்றனர்.