தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வம்சி இயக்க, தில் ராஜு தயாரித்துள்ளார். அதன் பிறகு விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள நிலையில், தமன் இசையமைத்துள்ளார். வாரிசு படத்தில் இருந்து ரஞ்சிதமே, தீ தளபதி மற்றும் அம்மா சென்டிமென்ட் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறும் நிலையில் இசையமைப்பாளர் தமன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வாரிசு படத்தில் இருந்து ஏற்கனவே 3 பாடல்கள் வெளியான நிலையில் இன்று 2 பாடல்கள் வெளியாகிறது. இதில் ஒரு பாடலுக்கு ரசிகர்கள் சீட்டிலிருந்து எழுந்து நின்று தன்னை மறந்து நடனம் ஆடுவார்கள் என்று கூறியுள்ளார். மேலும் இசையமைப்பாளர் தமன் சொன்னது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.