Categories
சினிமா தமிழ் சினிமா

“அடிதூள்” ஜப்பான் மொழியில் ரிலீசான RRR….. புதிய அறிவிப்பால் வியப்பில் ரசிகர்கள்….!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. இவர் பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர்கள் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆன ஆர்ஆர்ஆர் 1000,கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது.

இப்படத்தை உலகம் முழுதும் உள்ள பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் தற்போது ஜப்பான் மொழியிலும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அந்நாட்டு ரசிகர்களிடையே  நல்ல வரவேற்பும் எதிர்பார்ப்பும் இருக்கிறது. ‌மேலும் பல மொழிகளில் RRR திரைப்படம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்படுவது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |