ஐபிஎல் போட்டிகளை நடத்த மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ அனுமதி கிடைத்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்..
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியாவில் இந்தாண்டு அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை நடைபெறவிருந்த டி20 உலக கோப்பை அடுத்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் இந்தியாவில் அடுத்த ஆண்டு (2021) டி20 உலக கோப்பை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ல் தொடங்கி நவம்பர் 10 வரை 53 நாட்கள் ஐபிஎல் போட்டி நடைபெறும் என ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்திருந்தார்.. மேலும் மத்திய அரசிடம் அனுமதியும் கேட்டிருந்தார்.
இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ அனுமதி கிடைத்துள்ளதுள்ளதாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.. இதனால் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டி நடைபெறும்.. இதனால் ரசிகர்கள் உச்ச கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.