Categories
சினிமா தமிழ் சினிமா

இடுப்பு டாட்டூ குறித்து ரசிகரின் கேள்வி…. பதிலளித்த பிக்பாஸ் பிரபலம்…. என்ன சொன்னாருன்னு பாருங்க….!!!

டாட்டூ குறித்த ரசிகரின் கேள்விக்கு பிக்பாஸ் பிரபலம் பதிலளித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று ‘பிக்பாஸ்’. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. இவர் ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக அறிமுகமானார். இதனையடுத்து, ‘வாணி ராணி’ சீரியலின் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானார்.

உள்ளாடைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிக்பாஸ் ரேஷ்மா - Tamilstar

மேலும், இவர் நடித்த படத்தில் ‘புஷ்பா புருஷன்’ என்ற டயலாக் மூலம் இவர் மேலும் பிரபலமானார். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ”வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தில் இவர் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, தொடர்ந்து பல படங்களில் இவர் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளப்பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார்.

அப்போது ரசிகர் ஒருவர், ‘உங்கள் இடுப்பில் உள்ள டாட்டூ குறித்துக் கூறுங்கள்’ என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரேஷ்மா, ”நீங்கள் அந்த டாட்டுவை முழுமையாக காண முடியாது. இரண்டு அழகான ரோஜாக்கள் தான் அந்த டாட்டூ. அது ரொமான்ஸ்காக தான் போட்டுள்ளேன்” என பதிலளித்துள்ளார்.

Categories

Tech |