Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

“சுஷாந்த் சிங் மரணம்” வீடியோக்களை பார்த்து ரசிகை எடுத்த விபரீத முடிவு….!!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் உயிரிழந்ததை தாங்க முடியாமல் அவரது ரசிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங்  தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தோனியின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுத்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த  இவர் தோனியாகவே ரசிகர்கள் மனதில் வாழ்ந்து வந்துள்ளார் . இத் திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உருவாக்கியுள்ளது. படத்தில் இருப்பது சுஷாந்த் சிங்கா அல்லது தோனியா  என்ற சந்தேகமே வருமளவிற்கு தனித்துவமாக அந்த படத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரைத்துறையிலும் அவர்களது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த சுஷாந்த் சிங்கின் ரசிகை ஒருவர் அவரது இழப்பை தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த அந்த ரசிகை சுஷாந்த்  மறைவிற்குப் பிறகு அவரது வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வந்துள்ளார்.

மிகுந்த மன வருத்தத்தில் இருந்த அவர் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் விரைந்து வந்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  காவல்துறையினர் கூறுகையில் ” சுஷாந்த் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வந்த இவர் மிகவும் வேதனையில் இருந்துள்ளார். இதனால் வீட்டில் அனைவரும் இருந்த சமயம் தனது படுக்கை அறைக்கு சென்று தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்” எனக் கூறியுள்ளனர்.

Categories

Tech |