Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இளம் நடிகைக்கு கொரோனா…. தனிமையில் இருப்பதாக ட்விட்…!!!

பிரபல இளம் நடிகைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான பைரவா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அம்மு அபிராமி. இதை தொடர்ந்து இவர் தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன், அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்றின்  இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது.

இதில் பல  திரை பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை அம்மு அபிராமியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, எனக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டது. அதன் பிறகு நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன்.

அதில் எனக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நான் தனிமைப் படுத்திக் கொண்டு தேவையான மருந்துகளை எடுத்துக் கொண்டு வருகிறேன். எப்போதும் பாதுகாப்பாகவும், கவனமாகவும் இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |