சீரியல் நடிகை பவித்ரா வெள்ளித்திரையில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
விஜய் டிவியில் பிரபல சீரியல் நடிகைகளின் ஒருவர் பவித்ரா ஜனனி. இவர் ‘ராஜா ராணி’, ‘சரவணன் மீனாட்சி’ சீசன் 2 போன்ற ஹிட் தொடர்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதனையடுத்து, இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஈரமான ரோஜா’ சீரியலில் கதாநாயகியாக நடித்தார்.
தற்போது, ‘தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் விரைவில் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார் எனவும், இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Making a Interesting ,Successive & Impressive Mark in Small Screen #AzhagiyaThendral #அழகியதென்றல் #பவித்ரா #Pavithra heading into Big screen Details Soon..
Best Wishes….@pavithra.janani@onlynikil #NM pic.twitter.com/xWdeu4PyfH
— Nikil Murukan (@onlynikil) November 6, 2021