பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பிபாசா பாசு. இவர் தெலுங்கு சினிமாவிலும் பட படங்களில் நடித்ததோடு தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சச்சின் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் அலோன் என்ற திரைப்படத்தின் நடிக்கும் போது நடிகர் கரண் சிங் குரோவேர் என்பவரை காதலிக்க தொடங்கினார். இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு முறைப்படி திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த பிபாசா அண்மையில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்தார். அதன் பிறகு தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் நடிகை பிபாசா மற்றும் கரண் தம்பதிகளுக்கு இன்று அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் பெண் குழந்தை பிறந்ததற்காக கரண் மற்றும் பிபாசா தம்பதிகளுக்கு திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.