தொண்ணூறுகள் பிரபலமாக இருந்த தொகுப்பாளர் தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.
தொகுப்பாளர்கள் என்றாலே தற்போது இருக்கும் டிடி, பிரியங்கா, மாகாபா ஆனந்த், ரக்ஷன் ஆகியோரை தான் முதலில் ஞாபகம் வரும். ஆனால் தொண்ணூறுகளில் கேட்டால் முதலில் சொல்லும் பெயர் ஆனந்த கண்ணன் ஆகத்தான் இருக்கும். இவர் தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கென்று தனி சிறப்பு இருக்கும்.
அந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சியை இவர் உணர்வு பூர்வமாக தொகுத்து வழங்குவார். இதை தவிர்த்து சில படங்களிலும் இவர் நடித்து வந்தார். ஆனால் கடந்த சில வருடங்களாக இவர் திரைத்துறையை விட்டு தள்ளி இருந்தார். இந்நிலையில் இவர் டி தமிழ் ஒளிபரப்பாகும் சுவை என்ற சமையல் நிகழ்ச்சியின் மூலமாக ரீ என்ட்ரி கொடுக்கிறார்.