Categories
சினிமா தமிழ் சினிமா

ஆக்ஸிஜன் இல்லாமல் தவித்த சுரேஷ் ரெய்னா…. 10 நிமிடத்தில் உதவி புரிந்த சோனு சூட்…!!!

ஆக்ஸிஜன் இல்லாமல் தவித்த கிரிக்கெட் வீரருக்கு நடிகர் சோனு சூட் உதவி செய்துள்ளார்.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா தற்போது ஐபிஎல் லில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் இவரது 60 வயதான அத்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆகையால் அவருக்கு உடனடியாக ஆக்சிஜன் தேவை பட்டதால் தயவு செய்து யாராவது உதவி செய்யுங்கள் என்று தனது டிவிட்டர் பக்கத்தின் மூலமாக உதவி கேட்டிருந்தார்.

சுரேஷ் ரெய்னாவின் இந்த ட்வீட்டை பார்த்த நடிகர் சோனு சூட் பத்தே நிமிடத்தில் அவரது அத்தைக்கு தேவையான ஆக்சிஜனை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இதையடுத்து நடிகர் சோனு சூட்டுக்கு சுரேஷ் ரெய்னா தனது நன்றியை தெரிவித்துள்ளார். நடிகர் சோனு சூட் கடந்த சில ஆண்டுகளாக ஏழை மக்கள் மற்றும் மாணவர்களுக்கு பல நன்மைகளைப் புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சுரேஷ் ரெய்னாவின் டுவிட்டர் பதிவு

Categories

Tech |