பிரசாந்த் நடிக்கும் அந்தகன் படத்தில் மற்றுமொரு பிரபல நடிகை இணைந்துள்ளார்.
பாலிவுட்டில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன “அந்தாதூன்” திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். நீண்டநாள் இடைவெளிக்கு பிறகு நடிகர் பிரசாந்த் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். அவரது தந்தை தியாகராஜன் இப்படத்தை இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தில் மற்றும் ஒரு பிரபல நடிகை இணைந்துள்ளார்.தமிழில் வெளியான எதிர்நீச்சல், எல்கேஜி உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமான பிரியா ஆனந்த் தான் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.