பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஷில்பா செட்டி. இவருடைய கணவர் ராஜ் குந்த்ரா மாடல் அழகிகளை ஆபாசமாக படம் எடுத்து அதற்காக தனியாக செயலி உருவாக்கி விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. இந்த குற்றங்களுக்கு நடிகை பூனம் பாண்டே மற்றும் நடிகை ஷெர்லின் சோப்ரா ஆகியோரும் உடந்தை என்று கூறப்படுகிறது. இந்த வழக்கில் ராஜ் குந்த்ராவை மும்பை போலீசார் கைது செய்த நிலையில் தற்போது ஜாமினில் வெளியே இருக்கிறார். இந்த வழக்கு கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்த நிலையில் மும்பை போலீசார் தற்போது 450 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர்.
அதில் பைவ் ஸ்டார் ஹோட்டலில் வைத்து மாடல் அழகிகளை ஆபாசமாக படம் எடுத்து ராஜ் குந்த்ரா தன்னுடைய நிறுவனத்தின் மூலம் மொபைல் செயலிகளில் விற்பனை செய்ததோடு அதற்காக தனியாக ஒரு தொகையை பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தன் மீதான குற்றங்களுக்கு ராஜ் குந்த்ரா மறுப்பு தெரிவித்ததோடு வியாபார ரீதியான போட்டியில் தன்னை சிக்க வைப்பதற்கான சதி வேலை என்று கூறியதாக கூறப்படுகிறது. மேலும் பிரபல நடிகையின் கணவர் மீது ஆபாச பட வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.