Categories
சினிமா தமிழ் சினிமா

பகீர்!…. பிரபல நடிகை பார்வதி நாயருக்கு கொலை மிரட்டல்…. போலீசில் பரபரப்பு புகார்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பார்வதி நாயர். இவர் தன்னுடைய வீட்டில் வேலை செய்த சுபாஷ் சந்திர போஸ் சந்திரபோஸ் மீது கடந்த அக்டோபர் மாதம் 20-ஆம் தேதி கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதாவது தன்னுடைய வீட்டில் இருந்த விலை உயர்ந்த கடிகாரங்களை சுபாஷ் திருடி விட்டதாக பார்வதி நாயர் புகாரில் தெரிவித்திருந்தார். அந்த புகாரின் படி நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், நடிகை பார்வதி நாயர் மீண்டும் சுபாஷ் சந்திர போஸ் மீது ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில் என்னுடைய போட்டோக்களை தவறாக பயன்படுத்தி ‌ பொது இடங்களில் வெளியிடுவதோடு எனக்கு கொலை மிரட்டலும் விடுக்கிறார் என்று தெரிவித்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் சுபாஷ் சந்திர போஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சுபாஷ் சந்திர போஸும் நடிகை பார்வதி நாயர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |