Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை…. தொற்றிலிருந்து மீண்டதாக தகவல்….!!!

நடிகை சமீரா ரெட்டி கொரோனாவில் இருந்து மீண்டு பூரண உடல் நலம் பெற்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘வாரணம் ஆயிரம்’. இத்திரைப்படத்தில் மேக்னாவாக நடித்த நடிகை சமீரா ரெட்டி ரசிகர்களின் மனதை வெகுவாக கொள்ளைகொண்டார். இதைதொடர்ந்து தமிழ் சினிமாவில் வேட்டை, அசல், வெடி என ஹிட் படங்களை கொடுத்து வந்த அவர் ஹிந்தி, தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்து வந்தார்.

அதன்பின் திருமணம் செய்து கொண்ட அவர் தற்போது இரண்டு குழந்தைகளுடன் உள்ளார். இந்நிலையில் நடிகை சமீரா ரெட்டிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நடிகை சமீரா ரெட்டி தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு பூரண உடல்நலம் பெற்று விட்டதாக தெரியவந்துள்ளது.

Categories

Tech |