மீண்டும் நகுலின் மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நகுல். இவர் நடிகை தேவயானியின் தம்பி ஆவார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்” படத்தில் இவர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானார். இதனையடுத்து பல படங்களில் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் பாடகர் டான்ஸர் என பல்வேறு திறமைகளை கொண்டுள்ளார்.
இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், தற்போது மீண்டும் இவரின் மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். இதனை இவரின் மனைவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டு உறுதி செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் இவர்களுக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
https://www.instagram.com/p/CcSrh8qJMpt/