Categories
சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்பில் தவறி விழுந்த பிரபல நடிகர்…. தள்ளிவைக்கப்பட்ட திரைப்படம்…!!

பிரபல மலையாள நடிகருக்கு ஸ்டண்ட் காட்சியின் போது அடிபட்டதால் படப்பிடிப்பு சில  நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் மற்றும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பஹத் பாசில். இவர் மலையாள திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழ்கிறார். இந்நிலையில் பஹத் தற்போது “மலையன்குஞ்சு” எனும் மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். அந்த படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஸ்டன்ட் காட்சியின் போது பஹத் பாசில் திடீரென கீழே விழுந்தார்.

அவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த படக்குழுவினர் பஹத் பாசிலை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர் சில நாட்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தினர். இதனால் மலையன்குஞ்சு படப்பிடிப்பு சில நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |