விஜய் சேதுபதி விலகிய படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகரின் தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் நடித்து வரும் படம் “புஷ்பா”. சுகுமார் இயக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் இப்படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து நடிகர் மாதவன் இந்தகதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அவர் இப்படத்தில் நடிக்கவில்லை கூறினார்.இந்நிலையில் இப்படத்தில் யார் வில்லனாக ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி தமிழ் சினிமாவில் வெளியான வேலைக்காரன் படத்தில் நடித்திருந்த பஹத் பாசில் தான் இப்படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படம் தமிழ்,மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.